சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில்
தல வரலாறு..
சுந்தரநாடு வாளமர் கோட்டை என்ற பெயருக்குமுன் வழங்கப்பட்ட பெயருக்கன காரணம் என்னவென்றால் முன்னொரு காலத்தில் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியை ஆலங்காட்டில் பிர்மவிஷ்ணுவாதி தேவர்களால்
பூஜிக்கப்பட்ட காரணத்தால் வானவர் கோட்டை என்றும் பெயர் வழங்கப்பட்டது. பின்
சுந்தரநாடு வாளமர் கோட்டை என்று பெயர் வழங்கப்பட்டது ஏன்?.
இந்த பெயர் எதோ ஊருக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டது இல்லை இது ஒரு சரித்திரம்.
ஒரு முறை மன்னன் வேட்டையாடுவாதற்காக வந்த போது தாகமாக இருக்காவே இங்குள்ள ஆல்ங்காட்டில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து பக்கத்திலுள்ள குளத்தில் தண்ணிர் குடித்து விட்டு கிளம்பும் போது மன்னன் அங்குள்ள சிவலிங்கத்தை காணுகிறார்.அம்மன்னன் உடனை தனது உடைவாளை கிழே வைத்து சிவலிங்கத்தை தரிசித்து மிண்டும் வாளை எடுக்க முயன்ற்போது வாள் வரவில்லை.
மன்னன் தன்னை மறந்து சிவலிங்கத்தை தரிசிக்கும் போது மன்னனுக்கு இடபரூடராய் ( இறைவன் சிவபெருமன்)காட்சியளித்த பின் இந்த வானவர் கோட்டை என்ற பெயர் வாளமீரன் கோட்டை என்றனது.பிறகு அம்மன்னன் மகன் சுந்தரபாண்டியன் இந்த இடத்தில் திருக்கோயிலை எழுப்பி இத்தலத்தில் எழுந்தாருள்யுள்ள மூர்த்திக்கு சுந்தரேஸ்வரர் என்றும் இந்நாட்டிற்கு சுந்தரநாடு என்றும் பெயர் வைத்து அம்மன்னன் இத்தலத்திலே இருந்து சமாதி அடைந்தார். அவர் திரு உருவத்தை இந்த ஆல்யத்திற்கு மேற்க்கே காண்லாம்.
பயணங்கள் தொடரும்.........
Monday, July 5, 2010
வாளமர்கோட்டை- ஸ்ரீ அருள்மிகு இராகூத்து அய்யனார் :-
ஸ்ரீ அருள்மிகு இராகூத்து அய்யனார் :-
பழங்காலத்திலிருந்தே தமிழக மக்கள் விடாது வணங்கி வரும் வீரத்தெய்வங்களுள் மிகச் சிறப்பு மிக்க காவல் தெய்வமாக கருதப்படுவது அய்யனார் ஆகும். அய்யனார் ஊர் மக்களை தீயசக்திகளிலிருந்து காப்பதற்காக எப்போதும் இரவு நேரங்களில் குதிரை மீது சவாரி போவார் என்று மக்கள் நம்புகிறார்கள். அய்யனார் நாட்டுப்புறத் தெய்வங்களில் மேல்நிலை ஆக்கத் தெய்வமாக மதிக்கப்படுகிறார். இவர் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறார்.
அய்யனாரை ஐயனார் என்றும் எழுத்து மொழியில் எழுதுவோம். ஐ என்றால் தலைமை, அழகு, வியப்பு, அரசன், ஆசான், கடவுள், தந்தை என பல பொருள்படும்.
ஸ்ரீ அருள்மிகு இராகூத்து அய்யனார் கோவில் பற்றிய வரலாறு மற்றும் பல சிறப்ப சிறப்பம்சங்கள் மிக விரைவில்.............

Subscribe to:
Posts (Atom)