Pages


Wednesday, April 28, 2010

சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி :- 


புதன், 28 ஏப்ரல் 2010 இன்று வாளமர்கோட்டை ஓம் ஸ்ரீ விநாயகர்  கோவிலில் பால்குட திருவிழா மிகவும் சிறப்பக நடைப்பெற்றது.இந்த திருவிழாவில் பக்தர்கள் பெறும் அளவில் கலந்துகொண்டு இறையருள் பெற்றனார். சித்திரா பௌர்ணமியை ஒட்டி   பால்குடங்கள் எடுப்பது, சிறப்பு அபிஷேகங்கள், இறைவன் வழிபாடு, வீதி ஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

 சித்திரா பௌர்ணமி

அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.



பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

 சித்திரா பௌர்ணமியின் சிறப்பு:-

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.
இந்த ஆண்டு(2009) மே மாதம் 8-ம் தேதி இரவு சித்திராபௌர்ணமி அனுசரிக்கப்படுகிறது.
இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.
உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

சித்திரா பௌர்ணமி

சித்திரா குப்தம் மஹா பிராஜ்னம்
லோகாகி பத்ரதாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம் .
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்,எந்தக் காரியாலயத்திலும் அல்லது கம்பெனிகளிலும் கணக்கு சரி பார்க்க ஒருஆடிட்டர் தேவைப்படுகிறார். இவர் வரவு சிலவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சரியாக இல்லை என்றால் அதற்குத் தகுந்தாற்போல் தண்டனையும் கிடைக்கிறது. அபராதமோ அல்லது கோர்ட்டுக்கோ போகவேண்டி இருக்கும். அதே போல யமலோகத்திற்கும் ஒரு ஆடிட்டர் தேவைதானே… எத்தனைக் கோடி மக்களுக்கு பாப புண்ணியக் கணக்கு எழுத வேண்டும்? அதற்குத் தகுந்தாற்போல் வாழ்க்கையும் அமையும். யமலோக ஆபீஸில் ஆடிட்டர் சித்திர புத்திரன். இந்தச் சித்திர புத்திரன் பற்றி இரண்டு விதமான புராணங்கள்…
உலகத்திற்கெல்லாம் ஈசன் சிவபெருமான் ஒருதடவை ஏடும் எழுத்தும் கொண்டு கணக்கு எழுத ஒரு தேவதையைப் படைக்க எண்ணினார். அதன்படி ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட ஒரு தேவதைத் தோன்றினாள். அவளிடமிருந்து ஒரு அழகான புத்திரன் வர சித்திரத்திலிருந்து வந்ததால் சித்திரப் புத்திரன் என்று அழைக்கப்படலானான். இதே சித்திரப்புத்திரன் மீண்டும் ஒருமுறை சிவனருளால் காமதேனுவிற்குப் பிறந்து இதே பெயர் பெற்றார். இவனுக்கு எல்லோருடைய பாப புண்ணியக் கணக்குகளை எழுதும் வேலையைச் சிவபெருமான் கொடுக்க அதைப் பாரபட்சமில்லாமல் இவர் செய்து வருகிறார். குப்த் என்றால் ரகசியம்… நமது பாப
புண்ணியங்களின் ரிகார்ட் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர் யமதர்ம ராஜா முன்னிலையில் பூத உடலைவிட்டு வரும் மனிதர்களின் பாப புண்ணியங்களைத் தன் ஏட்டிலிருந்து ஒப்பிக்கிறார். அதற்குத் தகுந்தாற்போல் விளைவும் ஏற்படுகிறது. கேது கிரஹத்திற்கு சித்திரபுத்திரன் அதிதேவதை.
இன்னொரு புராணம்… ஒருசமயம் நீளாதேவி ஒரு அப்ஸரஸ் சூரியனின் அழகில் காதல் கொண்டு தன்னை இழந்தாள். அதனால் சூரியப்பிரகாசம் கொண்ட மிகுந்த அறிவாளியாக ஒரு குழந்தை சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று பிறந்தது. சிறந்த கல்விமானாக விளங்கி பிரும்மாவிற்கு சிருஷ்டி வேலையில் உதவ ஆரம்பித்து.
கொஞ்சம் கொஞ்சமாக தானே அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார் இதனால் தேவர்களுக்கு பயம் ஏற்பட்டு “எங்கே பிரும்மாவின் வேலையையும் இவர் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது? “என்று தயங்கி சூரியனிடம் முறையிட்டனர். சூரியன் தந்தை ஆனதால் சித்திர புத்திரனிடம் நயமாகப் பேசி இதைவிடச் சிறந்த வேலை ம்க்களின் பாப புண்ணியக் கணக்கு எழுதுவது என்றுச் சொல்லி அந்த வேலையைச் செய்யுமாறு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு சித்திரபுத்திரன் அந்தவேலையை இப்போதும் செய்துவருகிறார்.
இந்த நாளில் விரதம் எடுத்து பூஜை செய்பவர் அத்ற்கென்று தனிக்கோலம் போட்டு, தெற்குப் பக்கம் மூடி உள்ளே சூரிய சந்திரரின் படம் வரைந்து, நடுவில் சித்திரபுத்திரனின் படம் வரைந்து, ஒரு கையில் எழுத்தாணியும் மற்றொரு கையில் ஏடும் வரைந்து
வழிபடுவாரகள். உப்பு இல்லாத உண்வு உண்டு பின் ஒரு மாணவனுக்கு பள்ளி நோட்டு புத்தகமும் பேனாவும் தானம் செய்வார்கள்.
இந்தப் புராண்ங்களை ஒரு பக்கம் ஒதுக்கினாலும் ‘நமக்கு மேலும் ஒருவனடா அவன் நாலும் தெரிந்த கலைஞனடா’ என்றபடி நாம்ம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்மையோ தீமையோ விளைவுகள் உண்டு. இதைத்தான் ‘விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமோ?’ என்பார்கள் ஆகையால் எப்போதும் ஒரு விழிப்புணர்வோடு நல்லெண்ணங்களோடு அன்பு உள்ளத்துடன் கடமைகளைச் செய்து வந்தால் புண்ணியமே சேரும்.
இந்தியாவில் தெந்நாட்டில் காஞ்சியில் நெல்லுக்கார வீதியில் இவர் ஒரு கோவிலில் இருக்கிறார். சித்திரா பௌர்ணமி அன்று இவருக்குத் தனி பூஜை உண்டு.
“சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற் சித்ரகுப்தன்,
அத்தின அவனை உன்னி அர்ர்சனைக் கடன்களாற்றில்,
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே எமந்தன்னூரில்
இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே”

Friday, April 16, 2010

உலக வெப்பமயமாதலை தடுக்க ஒரு நூதன முயற்சி



உலக வெப்பமயமாதலால் ஆபத்து விழிப்புணர்வு ஏற்படுத்த
இளைஞர்களின் நூதன முயற்சி

உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வாளமர்கோட்டை கிராம மக்களிடையே மட்டும் இல்லமால் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த கிராம இளைஞர்கள் 500 மரக்கன்றுகளை கிராமம் முழுவதும் பொது இடங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர்.
உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலகமெங்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மரங்களை வளர்ப்பது அவசியம் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரை அடுத்த வாளமர்கோட்டை கிராம இளைஞர்கள் உலக வெப்பமயமாதல் குறித்து கிராம மக்களிடையே மட்டும் இல்லமால் உலகம் முழுவதும்  விழிப்புணர்வு ஏற்படுத்த நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர். மா, வேம்பு,தென்னை என பலன் தரும் மரக்கன்றுகளை கிராமம் முழுவதும் பொது இடங்களில் நட வாளமர்கோட்டை இளைஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மரக்கன்றுகளை வாங்கி, கிராம மக்களின் மூலமே நட்டு பாதுகாக்க இளைஞர்கள் எடுத்துள்ள நடவடிக்கை மூலம் மரக்கன்றுகள் வளரும் வரை அவற்றை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் கிராம மக்களுக்கு ஏற்படும் என்கின்றனர் கிராம இளைஞர்கள்.
இதுவரை 500கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வாளமர்கோட்டை கிராமத்தில், இளைஞர்களே முன்னின்று நட்டுள்ளனர். இதனால், கிராமமும் பசுமையாகும் என்கின்றனர் இளைஞர்கள்.

Thursday, April 1, 2010

பங்குனி உத்திர புகைபடங்கள் மற்றும் படகாட்சிகள்

10ம் நாள் அன்று காவடிகள் 14ஊர்களிலிருந்தும் வாளமர்கோட்டை வரும் அதன் சில புகைபடங்கள்:-