Pages


Monday, March 7, 2011

விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழா:-

விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழா:-


 வளமார் கோட்டை விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். இக்கோவில் புதுப் பிக்கப்பட்டு, இன்று(07-03-2011) கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று யாகசாலையில், வேதபண்டிதர்கள், வேதம் முழங்க, யாகசாலை பூஜைகள் நடந்தது.தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு, கோபுர கலசத்திற்கு,சிவன் கொவிலில்லிருந்து மிகவும் கோலாகலமாக புனிதநீர் குடங்கள் கொண்டு செல்லப்பட்டன. 
வேத மந்திரங்கள் ஒலிக்க, மேள, தாளங்கள் முழங்க ஒரே நேரத்தில்  கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர், கலசத்துக்கு பூக்கள் தூவி பூஜை செய்யப்பட்டது. தேவாரம், திருவாசப்பாடல்கள் ஓதுவார்களால் பாடப்பட்டது. கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட பின்பு கோயில் மேல்தளத்தில் இருந்த பக்தர்கள் மீது  புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து விழாவை முன்னிட்டு, நேற்று பகல் அன்னதானம், வழங்கப்பட்டது. இரவு , வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால், உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும்
  வளமார் கோட்டை கிராம பொதுமக்கள், செய்து இருந் தனர்.


விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழாவை பற்றி மேலும் படங்கள் மற்றும் படகாட்சிகள் விரைவில்........