Friday, April 16, 2010
உலக வெப்பமயமாதலை தடுக்க ஒரு நூதன முயற்சி
உலக வெப்பமயமாதலால் ஆபத்து விழிப்புணர்வு ஏற்படுத்த
இளைஞர்களின் நூதன முயற்சி
உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வாளமர்கோட்டை கிராம மக்களிடையே மட்டும் இல்லமால் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த கிராம இளைஞர்கள் 500 மரக்கன்றுகளை கிராமம் முழுவதும் பொது இடங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர்.
உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலகமெங்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மரங்களை வளர்ப்பது அவசியம் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரை அடுத்த வாளமர்கோட்டை கிராம இளைஞர்கள் உலக வெப்பமயமாதல் குறித்து கிராம மக்களிடையே மட்டும் இல்லமால் உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர். மா, வேம்பு,தென்னை என பலன் தரும் மரக்கன்றுகளை கிராமம் முழுவதும் பொது இடங்களில் நட வாளமர்கோட்டை இளைஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மரக்கன்றுகளை வாங்கி, கிராம மக்களின் மூலமே நட்டு பாதுகாக்க இளைஞர்கள் எடுத்துள்ள நடவடிக்கை மூலம் மரக்கன்றுகள் வளரும் வரை அவற்றை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் கிராம மக்களுக்கு ஏற்படும் என்கின்றனர் கிராம இளைஞர்கள்.
இதுவரை 500கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வாளமர்கோட்டை கிராமத்தில், இளைஞர்களே முன்னின்று நட்டுள்ளனர். இதனால், கிராமமும் பசுமையாகும் என்கின்றனர் இளைஞர்கள்.
Subscribe to:
Posts (Atom)