Pages


Sunday, March 24, 2013

பங்குனி உத்திரம் 2013 : -







12-வது மாதமான பங்குனியில்,12-வது நட்சத்திரமான இந்த  உத்திர தினம் பன்னிரு கை வேலவனுக்கு மிகவும் உகந்த நாள். எல்லா முருகன் கோயில்களும் குறிப்பாக அறுபடை வீடுகளிலும் மிகப் பெரிய விழாவாக இத்திருநாள் கொண்டாடப்படும். பல்வேறு விதமான காவடிகள் எடுத்தும்,அலகு குத்தியும்,பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவார்கள். வாளமர் கோட்டையில் காவடி திருவிழா விசேஷமாக நடக்கும்.
 சிவபெருமான், பார்வதியின் திருமணம் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரமாகும். தன் தாய், தந்தையருக்கு திருமணம் நிகழ்ந்த நாளில், அவர்களைத் தரிசிக்க முருகப்பெருமான் வருவார். இதனால், இந்நாள் சிவவழிபாட்டிற்கும், அவரது அம்சமான முருகப்பெருமானை வழிபடுவதற்கும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் முருகப்பெருமானை வேண்டி விரதமிருக்கலாம். சிவன், பெருமாளின் பிள்ளையாக ஐயப்பன் அவதரித்த நாளும் இதுவே. இந்நாளில் சாஸ்தா, ஐயப்பன் கோயில்களில் விசேஷ வழிபாடுகளுடன் விழா நடக்கும்.
 ராமபிரான், சீதையின் திருமணம் நிகழ்ந்த நாளும் இதுவே ஆகும். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தாயாரின், அவதார தின விழாவும் இந்நாளிலேயே நடக்கும்.
மனிதனாய் பிறந்த கிருஷ்ண பரமாத்மா, லட்சுமியான சீதாதேவியை ராமன் என்ற பெயர் ஏற்று திருமணம் செய்து கொண்டார். இந்த இனிய திருமணமும் இன்றே நிகழ்ந்தது. பார்வதிதேவி மீனாட்சி என்ற பெயரில் பூமியில் பிறந்து, தன் பக்தியால் இறைவனை மணமகனாக அடைந்தாள். அந்த இனிய நாளும் பங்குனி உத்திர நன்னாள்தான்.

இவையெல்லாம் கூட பங்குனி உத்திரத்தின்போது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால், தேவலோகத்தில் முருகனுக்கும், தெய்வானைக்கும் நடந்த திருமணம் இதே நாளில் நடந்ததாகக் கருதப்பட்டு, முருகன் கோயில்களில் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது. மனிதனாய் பிறப்பவன் தெய்வ நிலைக்கு உயர வேண்டும். அவன் இறைவனுக்குரிய கல்யாண குணங்களுடன் வாழ வேண்டும் என்பதையே இந்த விழா உணர்த்துகிறது. கிராமங்களில் சாஸ்தாவின் அம்சமான அய்யனாருக்கு விழா எடுக்கப்படுகிறது.


வழிபடும் முறை:

 பங்குனி உத்திரத்தன்று பகலில் ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் இருந்து, முருகனை வேண்டி விரதமிருந்து மாலையில் முருகனை வழிபட்டு, விரதத்தை பூர்த்தி செய்யலாம். தவிர, பெருமாள் கோயில்களுக்குச் சென்று சுவாமி, தாயாரையும், ஐயப்பன் மற்றும் கிராமதேவதையாக உள்ள சாஸ்தா கோயில்களுக்கும் சென்று வரலாம்.

பலன்:



மனமுருக பிரார்த்தித்தால் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதே இந்த அனைத்து வழிபாடுகளின் தாத்பர்யமாக இருக்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பங்குனி உத்திர தினத்தன்று விரதம் இருந்து வழிபடுவதும்,இல்லாதவர்களுக்கு தான,தர்மங்கள்,அன்னதான்ம் செய்வது,தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்ற நற்காரியங்கள் செய்வதும் மிகவும் விசேஷமாக கூற்ப்படுகிற்து.அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து,நற்செயல்கள் செய்வது எல்லா தடைகள்,தடங்கல்கள், துன்பங்கள்,இடர்ப்பாடுகளை நீக்கி வாழ்வில் வளமும் நலமும் சேர்த்து சகல ஜஸ்வர்யங்களையும் தரும்.

 பங்குனி உத்திர விரதம் இருப்பதால் திருமணத்தடை நீங்கும். தம்பதியர் ஒற்றுமையாக இருப்பர். சிறந்த குழந்தைகள் பிறப்பர். 

பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


  இன்று  (17-03-2013) வாள்மர்கோட்டைசுந்தரேஸ்வாரர் கோவிலில் உள்ள கொடிமரம் புண்ணிய குளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை வைத்து சிறப்பு பூஜைப் செய்யப்பட்டது.சிறப்பு பூஜை செய்யப்பட்டது.சிறப்புஅபிஷேகம், வேத மந்திரங்கள் ஒலிக்க, மேள, தாளங்கள் முழங்க மிகவும் சிற்ப்பாக டியேற்றத்துடன் தொடங்கியது.





இங்கு பிர்மோத்சவம் 10 நாள் திருவிழாவான பங்குனி உத்திரம்,​​ தேரோட்டத்துடன் கொண்டாடப்படும்.

இந்த பிர்மோத்சவம் 10 நாள் திருவிழாவின் முதல் நாளன இன்று  முதல் கரை அல்லது மண்டபடி வாளமர்கோட்டை.இன்று இரவு வனவேடிக்கை மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவருவர். இந்த பிர்மோத்சவம் 10 நாள்திருவிழாவில் ஒவ்வொரு நாள் இரவும் வனவேடிக்கை ,வாத்தியாங்கள் இசைக்க மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவாருவர் .
 பத்து நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட  ஊர் அல்லது ஊர்கள் சேர்ந்து நடத்தும் திருவிழா. அதன் விவரம் கீழ்வருமாறு..

  • 1ம் நாள்  :-
          கொடியேற்றுதல் வாளமர் கோட்டை,வரவுக்கோட்டை,காட்டூர்,
கரைமீண்டார்கோட்டை.

  • 2ம் நாள் :-
         வாண்டையார் தெரு-(வாளமர்கோட்டை),வாண்டையார் இருப்பு,
வாண்டையார் இருப்பு வடக்கு,வாண்டையார் இருப்பு தெற்கு,கொட்டைன்டார் இருப்பு.
  • 3ம் நாள் :-
          திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை.
  • 4ம் நாள் :-
         மடிகை.

  • 5ம் நாள் :-
         ஜென்பகபுரம்.

  • 6ம் நாள் :-
         தென்கொடார் இருப்பு.

  • 7ம் நாள் :-
         பெரன்டார் கோட்டை

  • 8ம் நாள் :-
          வாண்டையார் தெரு-(வாளமர்கோட்டை),வாண்டையார் இருப்பு,
வாண்டையார் இருப்பு வடக்கு,வாண்டையார் இருப்பு தெற்கு,கொட்டைன்டார் இருப்பு.

  • 9ம் நாள் :-
         திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை.

  • 10ம் நாள் :-
         துறையூர்.

இந்த திருவிழாவின் படங்கள் மற்றும் படகாட்சிகள்  திருவிழாவின் போது பதிவேற்றம் (upload) செய்யப்படும்.

பங்குனி உத்திர திருவிழாவின் பத்தாவது நாளன இன்று (26-03-2013) அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர்  திருக்கோயிலில் நடைபெறும் நிகழ்சிகள்.....

அருள்மிகு வள்ளி  தேவசேனை  உடனுறை  ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பகல் 3.00  மணிக்கு பால்காவடி பதினான்கு ஊர்களிலிருந்தும் பால்காவடி வரும்   மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இரவு  வனவேடிக்கை ,வாத்தியாங்கள் இசைக்க மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவாருவர் .

 பங்குனி உத்திர திருவிழாவின் மறுநாள்  பால்குடம் (27-03-2013) அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர்  திருக்கோயிலில் நடைபெறும் நிகழ்சிகள்.....


அருள்மிகு வள்ளி  தேவசேனை  உடனுறை  ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பகல் 3.00  மணிக்கு பால்குடம்  பதினான்கு ஊர்களிலிருந்தும் பால்குடம் கொண்டுவந்து அபிஷேகம்   மற்றும் சிறப்பு அலங்காரம் , பூஜைகளும் நடைபெறும்.


 பங்குனி உத்திர திருவிழாவின் இரவு நடைபெறும் நிகழ்சிகள்...
 மேலும் படங்கள் மற்றும் படகாட்சிகள் விரைவில்...........