சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது.. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு ‘மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்’ என வருவது சான்றாகும்.
நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றி தெரிந்தவரை இங்கே எழுதுகின்றேன் .
கோட்டம், நாடு என்னம் பிரிவுகள் தொண்டைமண்டத்திலும், வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் சோழமண்டலத்திலும் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும்.
இவைகள் கள்ளர் சரித்திரம் என்ற புத்தகம் மற்றும் வலைபக்கம் ,வலைபூக்களில் இருந்து படித்து கிடைத்த தகவல்கள்.
சுந்தர நாடு-சுந்தர நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்
- வாளமர் கோட்டை.
- வரவுக்கோட்டை
- காட்டூர்
- கரைமீன்டார் கோட்டை
- வாண்டையார் தெரு - (வாளமர் கோட்டை)
- வாண்டையார் இருப்பு
- வாண்டையார் இருப்பு வடக்கு
- வாண்டையார் இருப்பு தெற்கு
- கொட்டைன்டார் இருப்பு
- திருநாஇருப்பு
- நாய்க்கான் கோட்டை
- மடிகை
- ஜென்பகபுரம்
- தென்கொடார் இருப்பு
- பெரன்டார் கோட்டை
- துறையூர்
சுந்தர நாடு பற்றிய தகவல் மிகவிரைவில்......
No comments:
Post a Comment